Sunday, December 04, 2011வரக்காபொல உடுவன பகுதியில் இரண்டு பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேன் ஒன்றில் வந்ததாகக் கூறப்படும் இனந்தெரியாதோரால், இவர்கள் இருவரும் நேற்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
எலமல்தெனிய - உடுவன பகுதியைச் சேர்ந்த ஒருவரும், அவரின் நண்பரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment