Thursday, December 29, 2011

சூறாவளியில் சிக்கி மூன்று படகுகள் கடலில் நிர்க்கதி!

Thursday,December 29, 2011
இலங்கை::தானே சூறாவளியில் சிக்கியுள்ள மூன்று படகுகளை மீள கரைக்கு அழைத்துவர முடியாத நிலை காணப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று படகுகளிலும் 16 மீனவர்கள் இருப்பதாக கடற்றொழில் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லால் டி சில்வா குறிப்பிட்டார்.

காற்று மற்றும் அலைகள் உக்கிரமடைந்துள்ளதால் கரைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, சூறாவளியில் சிக்கியுள்ள மீனவர்கள் தொலைத்தொடர்பு கருவி மூலம் கடற்றொழில் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

படகில் உள்ளவர்களைக் காப்பாற்றுவதற்கு கடற்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறைக்கு கிழக்காகவுள்ள கடற்பிரதேசத்தில் அனர்த்தத்திற்கு இலக்காகியுள்ள படகுகள் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், நிர்க்கதிக்கு உள்ளான படகுகள் பயணிக்க வேண்டிய திசை குறித்து கடற்படையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment