Monday,December, 26,2011இலங்கை:தங்காலை ஹோட்டல் ஒன்றில் வைத்து வெளிநாட்டவர் ஒருவர் நேற்று அதிகாலை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மூவரைக் கைது செய்துள்ளனர்.
மேற்படி ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது குறித்த இடத்திற்குச் சென்ற வெளிநாட்டு ஜோடிகள் மீது ஒரு குழு தாக்குதல் நடத்தியதோடு துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்திற்கும் தங்காலை பிரதேச அரசியல்வாதிக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசை நிகழ்ச்சி நடந்தவேளை வெளிநாட்டு பிரஜையின் மனைவியிடம் பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட குழு தகாத முறையில் நடந்து கொண்டுள்ளது. இது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் கலகமாக மூண்டதுடன் அரசியல்வாதியும் அவரது குழுவினரும் வெளிநாட்டு ஜோடிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழந்துள்ளதோடு அவருடைய மனைவி காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment