Sunday, December 25, 2011இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டமை தொடர்பில் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு திருப்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய தரப்பினர் இலங்கையிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தீர்மானமிக்க பொறுப்புக்களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு நிறைவேற்ற தவறியுள்ளதாக அந்தக் குழு தெரிவிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு ஊடாக சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை 2012 ஆம் ஆண்டில் நடாத்துவதற்கான பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளதாக அந்தக் குழு சுட்டிக்காட்டுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை ஆராய்வதற்கு இத்தகைய விசாரணை இடம்பெறாமையின் ஊடாக, அனைத்து தரப்பினர் மீதும் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளின் தன்மைப்பற்றி புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக அந்தக் குழு கருதுகின்றது.
அத்தகைய பின்னணியில் எதிர்கால பிரச்சினை ஒன்றுக்கு வழிகோலுவதாக அமையலாம் எனவும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு குறிப்பிடுகிறது.
இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற அரசியல் வன்முறைகள், யுத்தத்திற்கு காரணிகளாக அமைந்த முக்கிய சம்பவங்கள் மற்றும் துன்பதுயரங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவிக்கிறது.
நாட்டின் ஆட்சி முறை, காணி தொடர்பான பிரச்சினைகள், அரசியல் தீர்வின் அவசியத்துக்கான அறிவார்ந்த பரிந்துரைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அந்த குழு மேலும் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment