Sunday, December 25, 2011இலங்கை::தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கு பிராந்திய காணிகளை கையளிக்கும் பணிகளின் ஏற்பட்டுள்ள நெருக்கடியை துரிதமாக நிவர்த்திக்கவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கத் தாக்கல் காரணமாக காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், துரிதமாக 'பிம் சவிய' வேலைத்திட்டத்திற்கமைய யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளான பொதுமக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment