Monday, December 5, 2011

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முடிவுக்கு (ஜ.ம.மு) குமரகுருபரன் ஆதரவு!

Monday, December 05, 2011
பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பின் நிலையை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரித்து வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலையை ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரிக்கின்றது வரவேற்கின்றது. இதன் சிறப்பு என்னவென்றால் அனைத்து தமிழ் கட்சிகளும் ததேகூ வின் நிலைப்பாட்டை ததேகூ மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை நியாயப்படுதுவதுதான்.

இந்தநிலை நீடிக்க வேண்டும். ஏமாற்று தந்திரங்கள் வேண்டாம். அரசாங்கம் இதயசுத்தியோடு இனப்பிரச்சனைக்கான தீர்வினை அணுகுவதானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் நேரடியாக பேச வேண்டும்.

அனைத்து முரண்பாட்டு தவிர்ப்பு, நுட்பங்களையும் மார்கங்களையும் கடைப்பிடித்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் கொடுக்க வேண்டும்.

சமாந்திரமாக பேச்சுவார்த்தையும் அதேவேளையிலேயே தெரிவுக்குழுவும் ஒரே வேலையை செய்வதென்பது duplication of job ஒருவேலையை இரண்டு தரம் ஒரே நேரத்தில் செய்து குழப்பத்தை கூட்டுவதாகும்.

பேச்சுவார்த்தையின் முடிவினை ஒருமித்து எடுத்து பின்னர் அரசாங்கம் தெரிவுக் குழுவிற்கோ அல்லது காலவிரயமின்றி சட்டவாக்கத்துக்காக பாராளுமன்றத்துக்கோ சமர்பிக்கலாம்.

ததேகூ மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை முரண்பாட்டு எழுத்தாளர்களும் கூட ஆதரித்து பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். இது குழப்பும் நேரமல்ல. தமிழ் மக்களோடு நல்லிணக்கம் ஏற்றபடும்வகையில் அரசும் பொலிஸ் அதிகாரிகளும் செயற்பட வேண்டும்.

அதற்கான கடும் உத்தரவு அரசு தலைமயிடமிருந்து அறிவிக்கப்பட வேண்டும். இதனை பேராசிரியர் திஸ்ஸ விதாரண நன்கு அறிவார் அப்படித்தான் ஏ.பி ஆர் சி யில் முடிவு எட்டப்பட்டது என குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment