Sunday, December 4, 2011

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸி. ஆளும் கட்சி அமோக ஆதரவு!

Sunday, December 04, 2011
மெல்பர்ன் : இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய ஆஸ்திரேலியாவின் ஆளும் லேபர் கட்சி உறுப்பினர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத பரவல் தடை சட்டம் தொடர்பான சர்ச்சையால், இந்திய அணுசக்தி திட்டங்களுக்கு யுரேனியம் வழங்க சர்வதேச நாடுகள் மறுத்து வந்தன. இப்போது உலகளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அணுசக்தி கொள்கையால் பல நாடுகள் இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்ய முடிவெடுத்துள்ளன. உலகளவில் 40 சதவீத யுரேனியம் ஆஸ்திரேலியாவில் உள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு ஆஸ்திரேலியா யுரேனியம் சப்ளை செய்வதில்லை. இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வருவதால், யுரேனியம் சப்ளை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் சமீபத்தில் கூறியிருந்தார். இதுகுறித்து தீவிர ஆலோசனை நடந்து வந்தது.
இந்நிலையில், ஆளும் லேபர் கட்சியின் 46வது தேசிய மாநாடு சிட்னியில் நடந்தது. இதில் கட்சி உறுப்பினர்கள் 205 பேர் பங்கேற்றனர்.
மாநாட்டை தொடங்கி வைத்த ஜூலியா, இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இப்போதுள்ள சூழ்நிலையில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டிய அவசியம் உள்ளது. இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்வதால், இருநாட்டு வர்த்தகம் உள்பட பல துறைகளில் சிறந்த உறவு ஏற்படும். உலக வரலாற்றில் முடிவெடுக்க வேண்டிய சிறந்த நேரம் இதுதான். இந்த வாய்ப்பை நாம் தவறவிட கூடாது. இந்தியாவுக்கு யுரேனியம் சப்ளை செய்வதில் கட்சி உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்பது தெரியும். ஆனால், சப்ளை செய்யவே ஆஸ்திரேலியா விரும்புகிறதுÕÕ என்று குறிப்பிட்டார். அதன்பின், தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடந்தது. அதில், இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க 185 உறுப்பினர்கள் ஆதரவளித்து ஓட்டளித்தனர். எனினும், போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி அல்பனீஸ் உள்பட சில அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓட்டளித்தனர்.
யுரேனியம் சப்ளை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் ஜூலியாவுக்கு மாநாட்டில் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment