Tuesday, December,27, 2011இலங்கை::வெற்றிலைக்கேணி கடலில் மீட்கப்பட்ட தமிழ்நாடு அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த 4 மீனவர்களும் யாழ். நகரிலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த 24ஆம் திகதி தமிழ்நாடு அக்கரைபேட்டை பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற மேற்படி 4மீனவர்களும் தமது படகு இயந்திரக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இறுதியாக இலங்கையில் வடகடலில் வெற்றிலைக்கேணி பகுதியிலு ள்ள கற்பாறைக்குள் சிக்கிக்கொண்டது.
இலங்கைக் கடற்படையினர் 4 மீனவர்களையும் மீட்டதுடன் பழுதடைந்த நிலையிலுள்ள படகையும் மீட்டெடுத்தனர். 4 மீனவர்களும் கடற்படையினரால் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பருத்தித்துறை பொலிஸார் 4 மீனவர்களையும் யாழ். மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதுடன் யாழ். நகரிலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment