Saturday, December 03, 2011இடுக்கி: முல்லை பெரியாறு அணை கட்டுவது தொடர்பாக தமிழகம்-கேரளா இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகள் எவ்வித முடிவும் தீர்மானிக்க படாத நிலையில் மேலும் மோதல்கள் வலுபெற்று கொண்டு தான் இருக்கின்றன.
இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநில அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு பிரதமர் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலை கேரள முதலமைச்சர் உம்மண் சாண்டியும் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment