Saturday, December 3, 2011

2708 இலங்கை இராணுவத்தினருக்கு பதக்கங்கள்!

Saturday, December 03, 2011
இலங்கையின் இராணுவ வரலாற்றில் முதல் முறையாக, இராணுவத்தில் பணியாற்றும் இரண்டாயிரத்து, 708 சிவில் ஊழியர்களுக்கு, வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பான பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. யுத்தம் நடைபெற்ற காலத்தில், வடக்கு கிழக்கில் பணியாற்றிய இராணுவ சிவில் ஊழியர்களை பராட்டி இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், முப்படைகளின் தளபதி என்ற முறையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரையின் பேரில், இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முப்படைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கே இதுவரை பதக்கங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. முதல் முறையாக முப்படைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. இராணுவ தலைமையகத்தில், இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற வைபவத்தில், இந்த பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.

No comments:

Post a Comment