Monday, December 12, 2011

கட்டார் பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

Monday, December 12, 2011
இலங்கை::கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் அல்தானி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்.

கட்டார் பிரதமருடன், அந்நாட்டு நிதியமைச்சர் மற்றும் பிரபல வர்த்தகர்கள் குழுவொன்றும் நாட்டை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார் பிரதமரின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர்கள் இங்குள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment