Monday, December 05, 2011யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் உயர்பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு வருகின்றமையினைக் கண்டித்து மாதகல் மக்கள் இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றை வலிதென்மேற்கு பிரதேச சபை முன்றலில் நடத்தியுள்ளனர்.
மாதகல் ஜே152பகுதியில் கடற்படையினரினால் பாரிய முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் இந்தப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
மேலும் மக்களுடைய பெரும்பாலான சொத்து குறித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே அடக்கப்பட்டிருக்கின்றது. எனினும் இந்தப் பகுதியில் புலிகள் முகாமிட்டிருந்தனர் புலிகள் பயங்கர ஆயுதங்களை பாதுகாத்து வைத்திருப்பதற்காக பயன்படுத்தினர் என கடற்படையால் கூறப்படுகின்றது.
இன்று (05) திங்கட்கிழமை முற்பகல் சண்டிலிப்பாய் அந்தோனியார் தேவாலய முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணியாக பிரதேச சபைச் செயலகத்தினைச் சென்றடைந்த மக்கள் பிரதேச சபைச் செயலரிடம் மனுவை கையளித்துள்ளனர்.
No comments:
Post a Comment