Monday, December 12, 2011

தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கின் இணையதளம் அங்குரார்ப்பணம்!

Monday, December 12, 2011
இலங்கை::தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கின் இணையதளம் அங்குரார்ப்பணம்

தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கின் உத்தியோகபூர்வ இணையதளம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், இந்தப் புதிய இணையதளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய www.lotuspond.lk என்ற இணையதளத்தினைப் பார்வையிடுவதன் மூலம் தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கு தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிந்தனையளவில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கலையரங்கை செயல்வடிவத்துக்கு மாற்ற ஜனாதிபதிக்கு முடிந்துள்ளதாக நிகழ்வின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment