Thursday, December 8, 2011

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களை விடுவிக்கக் தொடர் ஸ்டிரைக்கால் குறைந்த கூலிக்கு செல்லும் ராமநாதபுரம் மீனவர்கள்!

Thursday,December, 08, 2011
ராமநாதபுரம் : தொடர் ஸ்டிரைக்கால், ராமேஸ்வரம் மீனவர்கள் குறைந்த கூலிக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ள, ஐந்து மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள், கடந்த 28ம் தேதி முதல் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கூலிக்கு செல்லும் மீனவ குடும்பங்கள், பிழைப்புக்கு வழியின்றி தவித்து வருகின்றன. இதனால் மண்டபம், பாம்பன், சோழியாக்குடி, கோட்டை பட்டினம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கேரளாவுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள், ஒரு முறை கடலுக்குச் சென்று திரும்பும் போது, 800 முதல் 1,000ரூபாய் வரை விசைப் படகு உரிமையாளர்கள், கூலியாக கொடுத்து வந்தனர். தற்போது, மற்ற இடங்களில் அவர்களுக்கு, 200 முதல் 300 ரூபாய் வரையே கூலியாக கொடுக்கின்றனர். இதனால், ஒரு முறை வேலைக்குச் சென்றவர்கள் மறுமுறை செல்ல முடியவில்லை.

ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர் சங்க செயலர் போஸ் கூறியதாவது: மீனவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்கின்றனர். குறைந்த கூலி வழங்குவதால், மீண்டும் செல்வதில்லை. அரசு என்னதான் சமாதானம் சொன்னாலும், பொய்வழக்கு போடப்பட்டுள்ள மீனவர்களை விடுவித்தால் தான் எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு போஸ் கூறினார்.

No comments:

Post a Comment