Wednesday,December,07,2011மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் பெண்களுக் கெதிரான வன்முறை தொடர்பிலான செயலமர்வு!
மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தில் நேற்று பெண்களுக் கெதிரான வன்முறை தொடர்பிலான செயலமர்வொன்று நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.தணபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட விசாரணை அதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் கருத்துரை வழங்கினார்.
இந்த செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment