Wednesday, December 7, 2011

இலங்கை ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தரை நீக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Wednesday,December,07,2011
இலங்கை : ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை நீக்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அருகில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி, வோட் ப்ளேஸில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சின் அலுவலகம் வரை பயணிக்கவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் மாணவ சங்கம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த எதிர்ப்பு ஊர்வலம் சற்று நேரத்திற்கு முன்னர் கிருலப்பனை பகுதியின் ஊடாக பயணித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment