Sunday, December 04, 2011இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் நேற்று ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பல புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மணிப்பூர் மாநிலம் இம்பாலுக்கு நேற்று ஒரு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.அவர்களை விமான நிலையத்தில் ஆளுநர் குர்பச்சன் ஜகத், முதல்வர் இபோபி சிங் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.புதிய சட்டசபை வளாகம், அரங்கம், பஸ் நிலையம், திரைப்பட வளர்ச்சி கழக வளாகம் ஆகியவற்றை மன்மோகன் சிங்கும், சோனியாவும் திறந்து வைத்தனர். அதன்பின் ராஜ்பவன் சென்றனர். பிரதமர், சோனியாவுடன், மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், நாராயணசாமி ஆகியோர் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment