Sunday, December 4, 2011

500க்கும் மேற்பட்ட இலங்கை விண்ணப்பதாரிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக-குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா!

Sunday, December 04, 2011
500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டு காலமாக குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இரட்டைக் குடியுரிமை தொடர்பில் அரசாங்கம் பல புதிய விதிகளை அறிவித்ததன் பின்னர் முதல் தடவையாக இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

வி;ண்ணப்பதாரிகளில் இலங்கையர்களும், வெளிநாட்டுப் பிரஜைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் விண்ணப்பதாரிகளிலிருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இரட்டைக் குடியுரிமை வழங்குதல் தொடர்பான புதிய சட்ட யோசனைத்திட்டம் சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியோருக்கு குடியுரிமை வழங்குவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக் கொண்ட பலர் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment