Tuesday, December 27, 2011

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவென இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்து ரஸ்யா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது!

Tuesday, December,27, 2011
இலங்கை::தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவென இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்து ரஸ்யா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இதற்கு சிறந்த முன்னுதாரணம் என ரஸ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசு உண்மையாக செயற்பட்டுவருவதா ரஸ்ய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக அனைத்து மத, இன மக்களுக்கும் அவர்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க இலங்கை பாடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஸ்யா வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment