Wednesday, December 7, 2011

வடக்கில் மீண்டும் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் - சம்பிக்க ரணவக்க!

Wednesday,December,07,2011
வடக்கில் மீண்டும் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ,சிங்களவர்களுக்கு எதிரான சகல சக்திகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சோம தேரரின் 8வது நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அன்று புலிகளிடம் இருந்து ஆனந்தசங்கரியின் உயிரிரை பாதுகாத்து கொடுத்தது எமது இராணுவத்தில் உள்ள இளைஞர்கள் என்பது அவருக்கு தற்போது மறந்து போயுள்ளது. 1981 ஆம் ஆண்டு 21 ஆயிரம் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர். பயங்கரவாதம் நாம் விரும்பும் இடங்களில் வசிக்கும் உரிமையை எமக்கு இல்லாமல் செய்தது.

இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, காலம் கடந்துள்ள நிலையிலும், சம்பந்தன்கள் கொழும்பில் இருக்கும், உரிமை போன்று, வரலாற்று சிறப்புமிக்க சிங்களவர்களுக்கு வடக்கு கிழக்கில் வாழும் உரிமை இருக்க வேண்டும். சிங்களவர்கள் அன்று வடக்கில் வாழ்ந்தனர். பௌத்த மதம் வடக்கில் இருந்தது. வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதற்கு எதிராக குரல் கொடுக்கும் சக்திகள் எப்படியான கோஷங்களை எழுப்பினாலும், நாம் அதனை செய்வோம்.

சிங்கள மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்களை விடுதலை செய்ய வேண்டாம் என எந்த சிங்களவராவது குரல் எழுப்பினாரா....?. சிங்களவர்கள் வெளிநாடுகளுக்கு புறம் கூற போனார்களா....?. எனினும் இனவாதிகளாக சம்பந்தன்கள், தற்போது என்ன கூறுகின்றனர....;?. சிங்களவர்களுக்கு எதிரான அனைவரும் சிங்களவர்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளுங்கள்.... சிங்களவர்களின் பொறுமையை எந்த விதத்திலும் தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

No comments:

Post a Comment