Sunday, December 4, 2011

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துக்கொள்ள போவதில்லை - பிரதான எதிர்க்கட்சிகள்!

Sunday, December 04, 2011
அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட உள்ள உத்தேச நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துக்கொள்ள போவதில்லை என பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளன.

அரசியல் தீர்வு தொடர்பாக நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு, அதற்கு தேவையான சகல யோசனைகளும் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படுவது காலத்தை வீணடிக்கும் செயல் என்பதால், அதில் கலந்துக்கொள்வதை தவிர்க்க மேற்படி அரசியல் கட்சிகள் தீரமானித்துள்ளன.

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த முதலாம் திகதி அரசாங்கத்திற்கு உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் 31 ஆம் திகதிக்கு முன்னர் அரசியல் தீர்வு யோசனையை முன்வைக்குமாறும் கூட்டமைப்பு அரசாங்கத்தை கேட்டுள்ளது.

No comments:

Post a Comment