Thursday, December 8, 2011

எம்பிலிப்பிட்டிய - உடவளவ பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைது!

Thursday,December, 08, 2011
இலங்கை: எம்பிலிப்பிட்டிய - உடவளவ பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவரையும் தற்போது கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாகக் கைதான சந்தேக நபர் ககுலந்தெனிய - கட்டுவன பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வழங்கிய தகவலை அடுத்து தங்கச் சங்கிலியொன்றும் கைப்பற்றப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment