Monday, December 12, 2011

ஒரு இனத்தை இன்னுமொரு இனம் அடிமையாக வைக்க முடியாது-புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

Monday, December 12, 2011
இலங்கை::ஒரு இனத்தை இன்னுமொரு இனம் அடிமையாக வைக்க முடியாது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி போராளிகளை சமூகத்துடன் இணைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் 30 வருடகால யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இறுதி யுத்தத்தில் சரணடைந்த அல்லது எம்முடன் இணைந்த புலி போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் படிப்படியாக சமூகத்துடன் இணைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

12 ஆயிரத்திற்கும் மேல் சரணடைந்த புலி போராளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள், பயிற்சிகள் வழங்கப்பட்டு சமூகத்தின் பிரயைகளாக உருவாக்கி வருகின்றோம். இவ்வாறாக சமூகத்துடன் இணைப்பவர்களை சமூகத்தில் இருப்பவர்களை அவர்களை இணைத்து சம உரிமையோடு வாழ வைக்க வேண்டும். இவர்களும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பாது தேசிய நலனில் அக்கறை கொண்டவர்களாக அபிவிருத்தியை நோக்கி தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

எமது அரசாங்கம் செய்வதுபோல எந்தவொரு நாடும் புலி போராளிகளை புனர்வாழ்வளித்து விடுவித்ததில்லை. நாம் செய்கின்ற இத்தகைய வேலைத்திட்டங்களை எதிரணியில் இருக்கும் அரசியல்வாதிகள் எதிர்க் கருத்துக்களைக் கூறிவருகின்றனர். ஓர் இனத்தை இன்னுமொரு இனம் அடிமைகளாக வைக்க முடியாது. ஜனநாயக உரிமையுடன் வாழவேண்டும் எனத்தெரிவித்தார். இந்நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், மற்றும் எம்பிக்களான சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரன் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி போராளிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நேற்றையதினம் 100 முன்னாள் புலி போராளிகளை விடுவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் 47 பேரே விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

நேற்றைய நிகழ்வினில் நூறு முன்னாள் புலி போராளிகளை விடுவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோதும் இறுதியினில் 47 பேரே விடுவிக்கப்பட்டனர் . புலி போராளிகளை விடுவிக்கும் நிகழ்விற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விடுவிக்கப்பட்ட போராளிகளும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment