Monday, December 26, 2011

அரசாங்கத்திற்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்த சந்தர்ப்பத்திலும் முறிவடையலாம்-(புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்!

Monday,December, 26,2011
இலங்கை:இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி பயனில்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எந்த சந்தர்ப்பத்திலும் முறிவடையலாம் எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் மக்கள் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தொடர்பாகவும் சர்வதேச சமூகத்திடமும், ஐக்கிய நாடுகள் சபையிடும் முறையிடுவதை தவிர வேறு வழிவகை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிடுவதன் மூலம் மக்களை ஒன்றிணைத்து, ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்த சந்தர்ப்பம் ஏற்படும். அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளாக மாறியுள்ளதாகவும் இதனால் எந்த பயனும் இல்லை எனவும் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசாங்கம் கூறுகின்ற போதிலும், 13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் உள்ள காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கை இணைக்கவும் அரசாங்கம் இணங்கவில்லை. இவ்வாறான நிலைமையில் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் பயனில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment