Saturday, December 10, 2011

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் குடும்பத்தார் மன்னிப்பு கோரினால் சில வேளைகளில் ஜனாதிபதி கருணை காட்டக் கூடும்-அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

Saturday, December 10, 2011
முன்னாள் இராணுவத் தளபதியின் குடும்பத்தார் மன்னிப்பு கோரினால், சில வேளைகளில் ஜனாதிபதி கருணை காட்டக் கூடுமென நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் நெருங்கிய உறவினர்கள் நேரடியாக அவர் சார்பில் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரினால், அந்தக் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவிற்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமாயின் சில நியதிகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்கள் மன்னிப்பு கோரினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ரவூப் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சரத்பொன்சேகா ஓர்அரசியல் கைதி என்பதனை உலகமே அறியும் –கிரியல்ல!

புலிகளை தோற்கடித்த சரத் பொன்சேகா இன்று அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என லக்ஸமன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா அரசியல் கைதி என்பதனை முழு உலகமுமே ஏற்றுக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் எந்தவொரு முட்டாளும் யுத்தத்தை முன்னெடுக்க முடியும் என தெரிவித்திருந்ததாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக அமைச்சர் லலித் திசாநாயக்க உள்ளிட்டவர்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.

முட்டாள்தனமாக யுத்தத்தை முன்னெடுத்த காரணமாகவே இன்று இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லக்ஸ்மன் கிரியல்ல ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு பதிலளித்துள்ளார்.

சரியான முறையில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டிருந்தால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்க மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment