Wednesday, December 7, 2011

ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருகை!

Wednesday,December,07,2011
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளப் போவதாகக் கூறினார்.

இதுகுறித்து, அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலில் டெல்லியில் உள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறினார். மேலும் இந்த அமர்வில், இரு நாடுகளுக்கிடையே ராணுவ உறவை வலுப்படுத்துவது பற்றியும், ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதை குறித்து தன் ஆதரவினை தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து, மும்பையை பார்வையிட போவதாகவும், இந்தியாவிற்கு தான் நான்காவது முறையாக சுற்றுபயணம் மேற்கொள்ளப் போவதாகவும் பெருமையுடன் கூறியதாக செய்திகள் வெளியாகின்றன.

No comments:

Post a Comment