Saturday, December 03, 2011
நியூயார்க்: அமெரிக்காவின் பென்சில்வேனியா நகர நெடுஞ்சாலையில் சென்றவர்களுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கும் என்று தெரிந்திருக்கவில்லை. சாலையில் சென்ற வேன் ஒன்றில் இருந்து பறந்தன கரன்சி சலவை நோட்டுகள். ஒன்றல்ல, இரண்டல்ல... மொத்தம் ரூ.5 கோடிக்கு கரன்சி மழை பெய்தது. பின்னால் சென்ற வாகனங்கள் ஸ்தம்பித்தன. அனைவரும் பைக், கார் என வாகனங்களை நிறுத்தி காசை அள்ளத் தொடங்கினர்.
ஒருவழியாக அந்த வேனை முந்தி சென்ற ஒரு வாகன டிரைவர் விஷயத்தை சொல்ல, வேனை நிறுத்திய டிரைவருக்கு மிஞ்சியது ரூ.2,000 மட்டுமே. சிபிஎஸ் வங்கியின் பணத்தை கொண்டு சென்ற வேனின் பின்பக்க கதவு திறந்ததை டிரைவர் அறியாததே இத்தனை களேபரத்துக்கு காரணம். தகவல் அறிந்த போலீசார், ‘சாலையில் சிதறிய பணத்தை எடுத்தது திருட்டுக்கு சமம். உடனே திருப்பி தரவும்’ என்று எச்சரித்தனர்.

No comments:
Post a Comment