Sunday, December 11, 2011

வைகைப் புயலின் 2வது இன்னிங்ஸ்!

Sunday, December 11, 2011
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வெள்ளித்திரையில் வடிவேலுவை மக்கள் காண உள்ளார்கள்.

பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மம்பட்டியான் படத்தில் வடிவேலு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க எந்த இயக்குநரும் முன்வரவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் இருந்தபோது தொடங்கப்பட்ட மம்பட்டியான் திரைப்படம் டிசம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளது. இதில் வடிவேலு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆட்சி மாறிய பிறகு எந்தப் புதிய படத்திலும் வடிவேலு ஒப்பந்தமாகவில்லை. அவர் நடித்த ஒரு படமும் வெளியாகவுமில்லை. இந்நிலையில் முதல் முறையாக அவர் நடித்தப் படமொன்று வெளியாகிறது. அது மம்பட்டியான். வடிவேலின் மார்க்கெட் ஆடாமல் அசையாமல் இருக்கிறதா என்பதை அறிய இந்தப் படம் உதவும்.

No comments:

Post a Comment