Thursday,December 29, 2011இலங்கை::யாழ். மாநகர சபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மேலதிக 3 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் உள்ள யாழ். மாநகர சபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.
இதன்போது திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் பெறப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரும், ஈபிடிபியில் இருந்து விலக்கப்பட்ட மங்களநேசன் மற்றும் ஐ.ம.சு.மு உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
No comments:
Post a Comment