Monday, December 5, 2011

புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுதலையான முன்னாள் புலி போராளிகளின் மீள்வாழ்வுத் திட்டத்திற்கென-பிரித்தானியா 150,000 ஸ்ரேலிங் பவுன் உதவி!

Monday, December 05, 2011
அரசாங்கத்தின் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுதலையான முன்னாள் புலி போராளிகளின் மீள்வாழ்வுத் திட்டத்திற்கென பிரித்தானியா மேலும் 150,000 ஸ்ரேலிங் பவுன்களை உதவியளித்துள்ளது.

முன்னாள் புலி போராளிகளின் மறுவாழ்வுத் திட்டத்திற்கு மாத்திரம் இவ்வருடத்தில் பிரித்தானியா 650,000 ஸ்ரேலிங் பவுன்களை வழங்கியுள்ளது. இலங்கை பெறுமதியில் அது 116 மில்லியன் ரூபாவாகும்.

கடந்த வாரம் வடக்கு பகுதிக்குச் சென்றிருந்த இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் பிரித்தானிய அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டுள்ளார்.

இந்த கண்ணிவெடி அகற்றும் பணிக்கு பிரித்தானியா 535 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

முன்னாள் புலி போராளிகளின் வாழக்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் நாட்டில் சமாதானத்தை எதிர்பார்ப்பதாக பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாது கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்றுவரும் பகுதிகளைப் பார்வையிட்டதாகவும் வடக்கு மக்கள் சிலரை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு கிட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தெல்லிப்பளையில் உள்ள புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்திருந்ததோடு அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment