Sunday, November 20, 2011

TNA பிரச்சினைகளை உரியமுறையில் இனங்காணும் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது புலிகளின் கருத்துக்களையே வெளிப்படுத்துகிறது-ஜெகத் ஜெயசூரிய!

Sunday, November 20, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சினைகளை உரியமுறையில் இனங்காணும் என்பதை எதிர்ப்பார்க்க முடியாது என்று இலங்கையின் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார் இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய, தம்மை சந்தித்த பிரான்ஸின் தூதுவரிடம் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் ஆதரவு கட்சியாகும். எனவே அதன் கருத்துக்கள் கோரிக்கைகளை புலிகளை மையப்படுத்தியே அமைந்திருக்கும் என்று இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் இராணுவமயம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் அமெரிக்கா உட்பட்ட நாடுகளுக்கான தமது விஜயத்தின் போது விடுத்த கோரிக்கை தொடர்பாகவே ஜெகத் ஜெயசூரிய இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் வடக்குகிழக்கில் கைவிடப்பட்ட பாடசாலைகளிலேயே முகாமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஜெயசூரிய, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் கடமையை இராணுவம் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, யாழில் 150 க்கு மேற்பட்ட பொதுமக்களின் வீடுகளில் மட்டுமே இராணுவம் முகாமிட்டுள்ளதாகவும், அவை படிப்படியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்றும் யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment