Wednesday, November 9, 2011

TNAயினர் எங்குதான் சென்றாலும் அரசியல் தீர்வு செயற்பாட்டில் அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்த வேண்டும் - டிலான் பெரேரா!

Wednesday, November 09, 2011
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொண்டு பேச்க்களையும் சந்திப்புக்களையும் நடத்தலாம். ஆனால் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டில் கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சு நடத்த வேண்டும். இதுதான் யதார்த்தம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அமெரிக்கா சென்ற கூட்டமைப்பினரை அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ னும் சந்திக்காமை குறிப்பிடத்தக்க விடயமாகும் எனவும் அமைசச்ர் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பினர் நாடு திரும்பியதும் அவர்களுடன் அரசாங்கம் பேச்வார்த்தைகளை ஆரம்பித்து பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வரவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எங்கும் விஜயம் மேற்கொண்டு யாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். அதாவது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொண்டு பேச்க்களையும் சந்திப்புக்களையும் நடத்தலாம்.

ஆனால், அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட கூட்டமைப்பினரை அந்நாட்டின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ னும் சந்திக்கவில்லை.

எனவே, அவர்களின் பயணம் வெற்றியளித்தது என்று கூறமுடியாது. காரணம் லின் பஸ்கோவை இலங்கையிலேயே கூட்டமைப்பினர் சந்தித்திருக்கலாம்.

எது எவ்வாறெனினும் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் செயற்பாட்டுக்கு கூட்டமைப்பினர் இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதனைவிடுத்து புலம்பெயர் நாடுகளில் செயற்படும் சிலருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கூட்டமைப்பினர் செயற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு செய்கின்ற அநீதியாகவே இருக்கும்.

காரணம் இன்று உலகம் மாறிக்கொண்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம் அனைவருக்கும் தெரியும். 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு அனைத்து நாடுகளும் ஆதரவு வழங்கின. இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் முழுமையான ஆதரவை வழங்கின.

அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றனர். அதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். அண்மையில் வடக்கில் நடந்த தேர்தலில் கூட்டமைப்புக்கு ஏக பிரதிநிதிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. எதிர்க்கட்சிகளும் கணிமான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. எனவே கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல. இன்னும் பல தமிழ்க் கட்சிகள் உள்ளன எனவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment