Wednesday, November 9, 2011

நரேந்திர மோடிக்கு சீனாவில் உற்சாக வரவேற்பு: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களுடன் சந்திப்பு!

Wednesday, November 09, 2011
பெய்ஜிங்: குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று விமானம் மூலம் சீனா புறப்பட்டு சென்றார். தலைநகர் பெய்ஜிங் சென்ற அவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு கிரேட் ஹாலில் நடக்கிறது. இங்குதான் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சீன அதிபர் வரவேற்பு அளிப்பார். சீன பாராளுமன்றமும் இங்குதான் உள்ளது.

சீனாவில் எந்தெந்த தலைவர்களை நரேந்திர மோடி சந்திக்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை. தலைவர்களை சந்திக்கும் போது சிமெண்டு வர்த்தகம் குறித்து அவர்களுடன் நரேந்திரமோடி பேச்சு நடத்துகிறார். அப்போது உலகிலேயே மிக உயரமான புத்தர் நினைவு சின்னம் கட்டப்படும் என நரேந்திரமோடி அறிவிக்கிறார்.

பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகர மேயர்களை சந்திக்கிறார். வருகிற 11-ந் தேதி செங்டூவில் சிசு யான் மாகாண கவர்னர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களை சந்திக்கிறார். அங்கு நரேந்திரமோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அதில் அவர் பங்கேற்கிறார்.

No comments:

Post a Comment