Thursday, November 24, 2011

சிறுவர் இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு!

Thursday, November 24, 2011
சிறுவர்களை விற்கின்ற நடவடிக்கை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், மொரட்டுவை ராவதாவத்தை பகுதி சிறுவர் இல்லமொன்றிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த சிறுவர் இல்லத்தில் இருந்த சுமார் 60 பிள்ளைகளின் ஆவணங்களை சோதனைக்கு உட்படுத்தியதாக அதிகார சபையின் தலைவரும் சட்டத்தரணியுமான அனோமா திசாநாயக்க குறிப்பிட்டார்.

1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று மாலை சிறுவர் இல்லம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் சிறுவர் இல்லத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சிறுவர்களை தத்தெடுப்பதற்காக வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் அங்கு வந்திருந்ததாகவும் அனோமா திசாநாயக்க தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் முப்பதாயிரம் ரூபா பணத்தையும் தம்முடன் வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment