Sunday, November 13, 2011
புதுடெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்பட்டு மீண்டும் அவமரியாதை செய்யப்பட்டார். நியூயார்க் விமான நிலையத்தில் அவரது கோட், ஷீவை கழற்றி வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.
வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவம் தொடர்பாக கூறியதாவது:-
அப்துல்கலாமிடம் சோதனை செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நிறுத்தப்படா விட்டால் அமெரிக்க உயர் அதிகாரிகளையும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபாமாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் உயர்மட்ட நிலைக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார்.

No comments:
Post a Comment