கிளிநொச்சி பளைப் பகுதியில் வியாபாரிகளை ஆயுத முனையில் அச்சுறுத்தி பணத்தைப் பறிமுதல் செய்த நான்கு இராணுவத்தினருக்கும் விளக்கமறியல் எதிர்வரும் 02ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம் 06ஆம் திகதி கிளிநொச்சி பளைப் பகுதியில் பழைய இரும்பு தருவதாகக் கூறி மூன்று இரும்பு வியாபாரிகளை பளைப்பகுதிக்கு அழைத்து அவர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி 36 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நான்கு கைத்தொலைபேசிகள் என்பவற்றைப் பறிமுதல் செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரும் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அணிவகுப்பும் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி நான்கு சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர் செய்யப் பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் டிசெம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் உத்தரவிட்டார்.
கரந்தெனிய வைத்தியர் கொலை- சந்தேக நபர் கைது!
கரந்தெனிய அரச வைத்தியசாலையின் வைத்தியரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய
இரண்டு சந்தேக நபா்கள் நீதிமன்றத்தில் இன்று அடையாளங் காணப்பட்டனர்.
இந்த சந்தேக நபர்கள் பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோதே, சாட்சியாளர்களால் அடையாளங் காணப்பட்டனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலப்பிட்டிய நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான என்.டி.ஐ. அபேகுணசேகர உத்தரவிட்டார்.
இதேவேளை,சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஏனைய 03 சந்தேக நபர்களையும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:
Post a Comment