Monday, November 28, 2011இலங்கையில் சீரற்ற வானிலை நிலவியபோது காணாமற்போன 20 மீனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவிக்கிறது.
கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் சில்வா தெரிவிக்கிறார்.
சீரற்ற வானிலை நிலவியபோது கடலுக்குச் சென்றிருந்த 40 மீனவர்கள் காணாமல் போனதாகவும் அவர்களில் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீசிய கடும் காற்றின்போது குறித்த மீனவர்கள் காணாமற்போயிருந்தனர். அத்துடன் சுமார் 20 மீன்பிடி படகுகளும் காணாமற்போயுள்ளதுடன் அவை முற்றாக சேதமடைந்துள்ளமையினால் அவற்றை கண்டுபிடிக்க இயலாமலுள்ளதாக லால் சில்வா மேலும் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment