Monday, November 28, 2011

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் 70000 அமெரிக்க டொலர்களுடன் நைஜீரிய ஜோடி கைது!

Monday, November 28, 2011
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பொது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்தில் இருந்த நைஜீரிய நாட்டு தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 70000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் இலங்கை பெறுமதி 7,840,000 ரூபாவாகும்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸ் போதைக் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment