Monday, November 21, 2011

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையில் சட்டம் ஒழுங்கு செயலில் இல்லை என்றால் சர்வதேசத்தை நாடுவதைவிட வேறு வழியில்லை!

Monday, November 21, 2011
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கையில் நீதிக் கிடைக்காதவிடத்து சர்வதேசத்திடம் செல்ல நேரிட்டால் அதன்மூலம் தம்மீது துரோகிப் பட்டம் கட்டினாலும் அதனை பொருட்படுத்தப் போவதில்லை என ஹிருனிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மன் கொல்லப்பட்டமை தொடர்பில் இலங்கையில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் சர்வதேசத்திடம் செல்வதைவிட தமது குடும்பத்திற்கு வேறு வழியில்லை என ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

பீபீசி சிங்கள சேவையான சந்தேஷியாவுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் கூறியுள்ளதாவது,

எனது தாய்நாட்டின் மீது நான் அன்பு கொண்டிருக்கிறேன். துரோகி என்று அழைத்தால் அதற்கு நான் அஞ்சப்போவதில்லை" என ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

தனது தந்தையான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பில் ஹிருனிகா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

"இலங்கையில் சட்டம் ஒழுங்கு பின்பற்றப்படவில்லை என்றால் எமக்கு வேறு என்ன வழி உள்ளது?"

பாரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் முல்லேரியா துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஆளும் அரசின் நீதித் துறைமீது பாரத லக்ஷ்மன் நம்பிக்கை வைத்திருந்தார். எனவே அவரது கொலை விசாரணை துரிதப்படுத்தப்படாமைக்கு ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது என ஹிருனிகா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது அச்சுறுத்தல் அல்ல. வேண்டுகோள். இந்த விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டால் இலங்கையின் சட்டம் ஒழுங்கு குறித்து சர்வதேச சமூகம் விமர்சிக்கும். என ஹிருனிகா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment