Thursday, November 03, 2011ஐ.நா. செயலர் பான் கீமூனைச் சந்திக்கவுள்ளனர் என பெருமை கூறித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு, அவரைச் சந்திக்க முடியாமல் போனது சர்வதேச ரீதியில் ஏற்பட்ட படுதோல்வியாகும். இந்தத் தோல்வியை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு நியூயோர்க்கிலிருந்து நேற்று இரவு உதயனுக்குத் தெரிவித்தார் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அமெரிக்காவில் வைத்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்திப்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பு முதலாம் திகதி நிச்சயம் நடைபெறும் என்றும் உறுதியாகக் கூறப்பட்டிருந்தது.ஆனால், பான் கீ முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கிடையிலான சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.இதுதொடர்பாக சுடர் ஒளிக்கு கருத்துத தெரிவித்த சவேந்திர சில்லா மேலும் கூறியவை வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐ.நா.செயலாளர் பான் கீ மூனை சந்திக்கப்போவதாக அங்கும் இங்கும் பெருமைக்கூறித் திரிந்தனர். ஆனால், வீரவசனம் பேசிய அவர்களால் ஐ.நா. செயலர் பான் கீ முனை சந்திக் முடியாமல் போனது. இது அவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்பட்ட தோல்வியாகும். இனியும் பெருமைக் கூறித் திரியாது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
பான் கீ மூனை சந்திக்கவுளோம் என அனல் பறக்கும் வசனங்களை அள்ளிவீசிய கூட்டமைப்பினர் குறைந்தளவு அந்தஸ்துள்ள அதிகாரியொருவரையே சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பால் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை. அதிகாரமில்லாத அதிகாரியை சந்திப்பால் ஏற்படப்போகும் மாற்றம்தான் என்ன?ஐ.நா. செயலரை சந்தித்துக் கூறுவோம், சர்வதேசத்திடம் சொல்வோம் என உள்நாட்டில் கோஷமிட்டு மிரட்டித்திரியும் நடவடிக்கைகளை இனியாவது கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.அண்மையில் நான் உங்களிடம் (உதயனிடம்) கூறினேன். இந்தச்சந்திப்பு இடம்பெறாது என்று இன்று அவ்வாறு நடந்ததல்லவா? இப்படி அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment