Wednesday, November 9, 2011

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்: இராணுவ பேச்சாளர்!

Wednesday, November 09, 2011
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்களை நிறுத்துவதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது.

அவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்களை சட்டரீதியாக நீக்கும் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 450 பேரை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இராணுவப் பேச்சாளர் மேலும்
குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment