Monday, November 14, 2011

அமெரிக்காவின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் இலங்கைக்க விஜயம் செய்துள்ளார்!

Monday, November 14, 2011
அமெரிக்காவின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் இலங்கைக்க விஜயம் செய்துள்ளார்.

சர்வதேச கடல் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் விசேட உரையாற்றும் நோக்கில் தென் மற்றம் தென்கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதிப் பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் செச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

காலி களங்கரை விளக்கு ஹோட்டலில இரண்டு நாள் இந்த சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்து சமுத்திர பாதுகாப்பு கூட்டுறவு மற்றும் பாதுகாப்பு தந்திரோபாயங்கள் என்ற தலைப்பில் அமெரிக்க அதிகாரி உரையாற்ற உள்ளார்.

இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வின் பிரதான உரையை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஆற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு வெளிநாட்டு பாதுகாப்பு துறை சார் நிபுணர்கள் இந்த மாநாட்டில் விசேட உரைகளை நிகழ்த்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவை, அமெரிக்க பிரதிப் பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாளைய தினம் இந்த விசேட சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment