Monday, November 14, 2011
கொழும்பு: கேற்வே டூ வொண்டர் எனப் பெயரிடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 27ஆம் திகதி ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதி கூடிய வேகத்தில் செல்பவர்களை பிடிப்பதற்காக, மணித்தியாலத்திற்கு 100 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய புதிய பொலிஸ் கார்கள் இவ் வீதியில் பரீட்சிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வீதியில் அதிகூடிய வேகத்தில் செல்வோரைப் சில நிமிடங்களில் பிடிப்பதற்காகவே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவால் இந்த பரீட்சிப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சுபாரு இம்பிரிசா கார்கள் 2600 சிசி திறன் கொண்ட எஞ்சின்களைக் கொண்டதாகும்.
புதிய போக்குவரத்து பொலிஸ் பிரிவால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகள் நாட்டில் காணப்படும் சாதாரண போக்குவராத்து சட்டங்களிலிருந்து வேறுபடும்.
பொலிஸாரினால் ஏற்கனவே புதிய விதிமுறைகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய போக்குவரத்து பொலிஸ் பிரிவு மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரியால் நிர்வகிக்கப்பட உள்ளது.

No comments:
Post a Comment