Tuesday, November 29, 2011

புலிகளின் தளபதி நகுலன் இரகசியத் தடுப்பு முகாம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தெரிவித்துள்ளது?

Tuesday, November 29, 2011
புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பிக்கைக்குரிய தரப்புத் தகவல் மூலம் தமக்கு தெரியவந்துள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கேர்ணல் நகுலன் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009 மே 18ம் நாள் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றின் தலைவராக கேர்ணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமான புலி உறுப்பினர்களின் சடலங்களுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்ட கேர்ணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் மாதம் 8 ஆம் திகதி இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கேர்ணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பை அடிப்படையாக வைத்து நகுலன், திருகோணமலையில் 2009 ஆண்டின் இறுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

கேர்ணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டதாக ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும், புலம்பெயர் புலிளுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது பற்றி ஊடகங்களுக்கு அறிவிக்காத அரசாங்கம், அதனை இரகசியமாகவே வைத்திருந்தது.

ஆனால், புலம்பெயர் புலிகள் குறித்த தகவல்களை கேர்ணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சிகள் மேற்கொண்டனர்

கேர்ணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த புலித் தலைவர்களை அரசாங்கத்தின் பக்கம் வசப்படுத்தும் பொறுப்பு கேர்ணல் ராமிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கேர்ணல் ராமுக்கு சகல வசதிகளையும் செய்துக்கொடுத்துள்ளனர் எனவும் புலம் பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த அவருக்கு 94 -777140637 என்ற இலக்க கொண்ட கையடக்க தொலைபேசியும் வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக லங்காநியூஸ் வெப் குறிப்பிட்டுள்ளது.

நகுலனுக்கு எதிராக புலி இணையங்கள் ஊடகங்கள் போலி பிரச்சாரம்!

புலிகளின் சாள்ஸ் அன்ரனி படை தலைவர் நகுலன் என்பவர் கொல்லபட்டதாக வந்த செய்தி திட்டமிட்டு இலங்கை இராணுவ உளவுத்துறை மீது சேறடிக்க மேற்கொள்ளபட்ட பிரச்சாரமாகவும் சிறையில் இருக்கும் புலி உறுப்பினர்களை கொலை செய்ய வேண்டும் எண்ற உள்நோக்கத்துடன் வெளியானதாகவும் தெரியவருகிறது. நகுலன் நேற்றும் தனது புலி முக்கியஸ்தர்களுடன் லண்டனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர் தான் இருப்பதாகவும் கூறிவரகின்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பதுக்கு அப்பால் அவர் கொல்லபட்டவிட்டார் என்பது போலியான தகவல் என்பது குறிப்பிடதக்கது. இத்தகய செய்திகள் உண்மையாக சில கொலைகளை செய்யவே வளிகோலும் என தெரியவரகிறது.

No comments:

Post a Comment