Tuesday, November 22, 2011வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின்னர் சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றில் செயற்பட்ட விதம் குறித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர நேற்று திறந்த நீதிமன்றில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றிற்கு வெளியே அழைத்துச் செல்லப்படுவதற்கு தயாரான போது சில சட்டத்தரணிகள் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சரத் பொன்சேகா தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து யாரேனும் திருப்தி கொள்ளவில்லை எனில் அது தொடர்பில் மேன்முறையீடு செய்யமுடியும் என நீதிபதி தீபாலி விஜேசுந்தர தெரிவித்தார்.
சட்டத்தரணிகளின் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களில் மூலம் வெளிப்படுத்தவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான நடவடிக்கைகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
நீதிமன்ற கட்டமைப்பில் இவ்வாறான முறையற்ற செயற்பாடொன்று எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் திறந்த நீதிமன்றில் நேற்று கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment