Tuesday, November 22, 2011

ஐ.தே.க. 29 இல் தேசிய போராட்டம்!

Tuesday, November 22, 2011
சர்வதேச நாயண நிதியத்தினை திருப்திப்படுத்துவற்காகவே இந்த வரவு செலவு திட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறையிட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி 3 காரணங்களை முன்னிலைப்படுத்தி தேசிய போராட்ட தினமொன்றை அறிவிக்கவ்ளளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment