Friday, November 4, 2011

செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் மன்மோகன் சிங், சோனியா காந்தி!.

Friday, November 04, 2011
வாஷிங்டன்: அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள 70 பேர் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஹூ ஜின்டோ இருக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். ‘இந்தியாவின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த அரசியல்வாதி சோனியா. இருமுறை பிரதமர் பதவியை மறுத்தவர்Õ என அதில் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. கடந்த முறை வெளியான பட்டியலில் சோனியாவுக்கு 11வது இடம் அளிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மன்மோகன் சிங் 19வது இடத்தில் உள்ளார். ‘கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பொருளாதார நிபுணரான மன்மோகன், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கிய பங்காற்றியவர்.

கடந்த பத்து வருடங்களாக, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறார் என்று பிரதமருக்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள் தவிர ரிலையன்ஸ் நிறுவனங்கள் தலைவர் முகேஷ் அம்பானி (35வது இடம்), தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் (47), விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி (61), பாகிஸ்தானின் ராணுவ தலைவர் அஸ்பக் பர்வேஸ் கயானி (34), திபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமா (76) ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

முதல் 10 இடங்களுக்குள் ஜெர்மன் பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (4), மைக்ரோ சாப்ட் தலைவர் பில்கேட்ஸ் (5), சவுதி அரேபிய பட்டத்து அரசர் அப்துல்லா பின் அப்துல்லாசிஸ் அல் சவுத் (6), பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (10) ஆகியோர் உள்ளனர்.

No comments:

Post a Comment