Friday, November 4, 2011

மாணவனை கடத்தி கப்பம் கேட்டவர்கள் பொலிஸாரிடம் சிக்கினர்!

Friday, November 04, 2011
கொழும்பின் முன்னணி பாடசாலை மாணவன் ஒருவரைக் கடத்தி 50 இலட்ச ரூபாவை கப்பம் பெறுவதற்கு முற்பட்ட சம்பவத்தின் சகல சந்தேகநபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவனை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தை கைப்பற்றியதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவிக்கிறார்.

வாகன சாரதி எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று விசாரணகைளின் மூலம் தெரியவந்துள்ளது.

கல்கிஸ்ஸ பிராந்தியத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இரண்டு பிரதான சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேகநபர்கள் வேறாரு கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கப்பம் பெறும் நோக்கில் கடத்திச் செல்லப்பட்ட மாணவன் கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மாணவனை விடுவிப்பதற்காக சுமார் மூன்று இலட்சம் ரூபா ஏற்கனவே கப்பமாக வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்படைய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment