Wednesday, November 2, 2011

இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்று குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டோரை கைதுசெய்ய நடவடிக்கை!

Wednesday, November 02, 2011
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்று பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவிக்கின்றது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 475 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆரச்சி கூறினார்.

அவர்களில் சிலர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்திற்கு சொந்தமான ஆயுதங்களை எடுத்துச் சென்றுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சுமார் ஆறுபதாயிரத்திற்கு மேற்பட்டோர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களில் 95 வீதமானோர் குற்றச்செயல்களுடன் தொடர்புபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றச் செய்ல்களுடன் தொடர்புபடாத இராணுவ வீர்ர்களை இராணுவத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment