Wednesday, November 02, 2011திருமங்கலம்:மதுரை அருகே உள்ள ஆலடிபட்டி என்ற இடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லும் பாதையில் “பைப்” வெடிகுண்டு வைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இன்று மதியம் திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். இதையொட்டி திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போலீசார் கோர்ட்டுக்கு வரும் பொதுமக்களை கடும் சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் கோர்ட்டு வளாகத்தில் தாலுகா அலுவலகம் மற்றும் சார்நிலை கருவூலகம் உள்ளது. இங்கு செல்ல இன்று ஒருநாள் மட்டும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கோர்ட்டு வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இன்று மதியம் குற்றவாளிகள் 2 பேரும் நீதிபதி முன்பு பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்கள். பாதுகாப்பு பணியில் திருமங்கலம் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரும் ஈடுபட்டனர்.
அத்வானியை கொல்ல சதி செய்த குற்றவாளிகள் திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment